தமிழக மின்சார வாரியத்தில் 5000க்கும்
மேற்பட்ட கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு 2019ஆம் ஆண்டு அறிவிப்பு
வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து
தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றுகிற ஊழியர்கள் தங்களை நிரந்தரம் செய்யாமல்
கேங்மேன் பணிக்கு புதிதாக ஆட்களை
எடுப்பதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தங்களுடைய பணியை நிரந்தரம் செய்தபிறகுதான்,
புதிதாக ஆட்களை எடுக்கவேண்டும் என்றும்,
2019 உத்தரவை ரத்துசெய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
ஆனால் தமிழக அரசு தரப்பில், அனைத்து விதிகளும்பின்பற்றப்பட்டிருப்பதாகவும், உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட 70% பணிகள் முடிந்துள்ளது எனவும், ஏற்கெனவே தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2019ஆம் ஆண்டு அறிவிப்பின் அடிப்படையில் பணிகளைத் தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்துவைத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...