
பிப்ரவரியில் மற்ற வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, தேர்வு அட்டவணை வெளியிடப்படும்போது வழங்கப்படும். நீட், ஜே.இ.இ. பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. இருப்பினும் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் ஹைடெக் லேப் உள்ளது. மாணவர்களுக்கு க்யூ ஆர் கோடு, யூ-டியூப் சேனல் மற்றும் 12 தொலைக்காட்சி வழியாக பாடம் கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் 9, 10, 11, 12ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பிப்ரவரி மாதம் பள்ளி திறப்பு குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் 6ம் வகுப்பு திறக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் கவனித்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
எந்த மாற்றமும் இல்லை
ReplyDelete5 varusama ularal thaanga mudiyala.ADMK katchiyila irukave vetkama irukku
ReplyDelete