சிறுபான்மை
பள்ளி ஆசிரியர்கள் போன்று புத்தாக்கப் பயிற்சியை அரசு உதவிபெறும் பள்ளி
1500 ஆசிரியர்களுக்கும் பயிற்சியளித்து ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து
விலக்களித்திட மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009
RTE
Act அடிப்படையில் தமிழ்நாட்டில் 23/08/2010 முதல் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெறுபவர்கள் TET தேர்ச்சி கட்டாயம் என்ற
சூழல் உள்ளது.
தமிழகத்தில்
RTE அமலாக்கம் அரசாணை எண் 181 அடிப்படையில் இருந்தாலும், தமிழக
பள்ளிக்கல்வி இயக்குனரின் 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள்
அடிப்படையில் TET கட்டாயம் என்ற நிபந்தனைகள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
எடுத்துக் கூறப்பட்டது.
அதனால்
16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட சுமார் 1500அரசு
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் TET கட்டாயம் எனக்கூறி ஊதியம்
தவிர மற்ற எந்த பணப்பயனுமின்றி தவித்து வருகின்றார்கள். தற்போது
மைனாரிட்டி
பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் DIET மூலம்
புத்தாக்கப் பயிற்சி இம்மாதம் கொடுத்து TET தேர்விலிருந்து விலக்களிக்க
ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதுபோன்று அரசு உதவிபெறும் பள்ளி
ஆசிரியர்களுக்கும் வழங்கி உதவுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்
வேண்டுகிறேன்.
23/8/10
முதல் 16/11/12 வரையில் TET பற்றிய புரிதல் இன்றி பணி நியமனத்திற்கு
அனுமதி அளித்ததால் தற்போது வரை சுமார் 1500ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட
சூழல் ஒருபுறம் இருக்க,
TET
நிபந்தனைகளில் கொண்டு வரப்பட்ட ஆசிரியர்கள் பத்து ஆண்டுகள் பணிநிறைவு
பெறும் சூழலிலும், இன்றும் மன வருத்தத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
பல்வேறு
சிக்கல்கள் நிறைந்த இந்த TET பிரச்சினைகளை களையும் விதமாகவும், பணியில்
உள்ள (TET சிக்கலில் உள்ள) ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம்
தமிழக அரசு பாதுகாப்பு தரும் எனவும், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அல்லது
சிறப்பு தேர்வு விரைவில் நடத்தப்படும் எனவும் கடந்த பிப்ரவரி மாதம்
மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். அதன்
பிறகுதான் இந்த TET சிக்கலில் இருந்த ஆசிரிய குடும்பங்கள் சற்றே
நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் இன்று வரை முழுமையான அரசாணை
பிறப்பிக்கப்படவில்லை.
தற்போது
23/08/2010 முதல் தற்போது வரையிலான காலகட்டம் மொத்தமாக பத்து ஆண்டுகள்
நிறைவுற்றதால் தேர்வு நிலை ஆசிரியர்களாக தரம் உயர்கின்றனர்.
வளரூதியம்,
ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஊதியப் பலன்கள் நிறுத்தக்கூடாது என்ற சென்னை
உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தும் கூட, மாநிலம் முழுவதும் சமமற்ற முறையில்
தரப்படுகின்றன.
பெரும்பாலான
ஆசிரியர்களின் பதவி உயர்வுகள் தகவல்கள் இன்றி தேங்கி நிற்கின்றன.
உயர்கல்வி படிக்ககூட அனுமதி மறுக்கப்படுவது உள்ளிட்ட பல இன்னல்களைச்
சந்தித்து வருகின்றனர் இந்த TET நிபந்தனை ஆசிரியர்கள்.
ஆகவே விரைவில்
மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் அவர்கள் கருணை அடிப்படையில் நல்ல அறிவிப்பு
வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக்
கொண்டு உள்ளனர்.
RTE
- TET சிக்கல் சரிசெய்யும் பொருட்டு தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஆசிரியர் பணியில் உள்ள 1500 ஆசிரியர்களுக்கும் விரைவில் ஆன்லைன் மூலம்,
சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிப்பது போல அரசு உதவிபெறும்
பள்ளி ஆசிரியர்களுக்கும் TET புத்தாக்கப்பயிற்சி அளித்து TET.
தேர்விலிருந்து முழுவதும் விலக்கு அளித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின்
வாழ்வாதாரம் காப்பாற்ற ஆவன செய்யவேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ் நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...