முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டியவை.
1 பட்டியலில் இடம் பெறும் ஆசிரியர்கள் 31.12.2020 அன்று குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பும், பி.எட்., பட்டப்படிப்பும் முடித்திருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் தற்காலிக பட்டச் சான்று(Provisional Certificate) வைத்திருத்தல் வேண்டும்.
2 வெளிமாநில பட்டச்சான்று எனில் மதிப்பீடு(Evaluation) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
3 1.1.2018 அல்லது அதற்குப் பின் முதுகலையாசிரியர் பதவி உயர்வை தற்காலிகத் துறப்பு செய்தவர்கள் மற்றும் ஏற்கனவே முதுகலையாசிரியர் பதவி உயர்வினை நிரந்தரத் துறப்பு செய்தவர்களின் பெயர்களை பட்டியலில் எக்காரணத்தைக் கொண்டும் சேர்த்தல் கூடாது.
4 அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்ந்த விவரங்களை அளிக்கையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் தர எண் (வருடம் மற்றும் ரேங்க் எண்) தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும். (நியமன ஆணையின் நகல் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டும்)
5 ஆசிரியர்களின் பணிபதிவேட்டின்படி சரிபார்த்து பிறந்ததேதி, நியமனமுறை, மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கையின்கீழ் தண்டனை ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரம், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பின் அதன் விவரம் (17(ய) அல்லது 17(b)) போன்றவற்றை உறுதி செய்து சரியாக அளிக்க வேண்டும்
6 இளங்கலை பட்டத்தில் இரட்டைப்படிப்பு ( Double degree / Additional Degree ) படித்தவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது.
7. அலகு மாறுதல் மற்றும் துறை மாறுதலில் பள்ளிக்கல்வித்துறையில் பணியில் சேர்ந்திருப்பின் பள்ளிக்கல்வித்துறையில் சேர்ந்த நாளை மிகச்சரியாக குறிப்பிடவேண்டும்.
8 அரசாணை நிலை எண் 65 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை ( எஸ்) நாள் 02.07.2014 ன்படி10 +2 +3 முதுகலை பட்டத்துடன்BEd என்ற முறைப்படி கல்வித்தகுதி பெற்றவர்களின் பெயர்களை மட்டுமே பரிந்துரை செய்யவேண்டும்.
இணைக்க வேண்டிய சான்றிதழ் விபரம்
கீழ்க்கண்ட சான்றுகளின் நகல்களை தலைமை ஆசிரியரின் மேலொப்பத்துடன் சார்ந்த ஆசிரியரின் படிவத்துடன் கீழ்கண்ட வரிசைப்படி இணைத்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
1. நியமன ஆணை நகல் மற்றும் நியமன பதிவின்SRபதிவு பக்க நகல்
2. பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகல் மற்றும் பதிவின் SR பதிவு பக்க நகல்
3.தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்ட ஆணையின் நகல் மற்றும் பதிவின் SRபதிவு பக்க நகல்
4) 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல்
5) 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல்
6) UG Degree (with cumlative Marksheet) /
7) PG Degree (with cumlative Marksheet) 8) B.Ed (with cumlative Marksheet)
9)வேறு மாநில பட்டம் / பட்டயச் சான்றாக இருப்பின், அச்சான்றின் மதிப்பீடு செய்யப்பட்ட (Evaluation) சான்றின் நகல் மற்றும் SR பதிவு பக்க நகல்.
10).பட்டப்படிப்பில் ஏதேனும் இணைக்கல்வி தகுதிக்கான அரசாணையின் (Equivalency G.O) ) நகல்.
11) 10 ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தமிழ் பயிலாத ஆசிரியர்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை மொழித்தேர்வில் தேர்ச்சிபெற்ற சான்றின் நகல்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...