அரசாணை ( நிலை ) எண் 344 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM II ) துறை நாள் 10.07.2020- ன் மூலம் பாடநுால்கள் மற்றும் பிற கல்வி சார் பொருட்களை வழங்குவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது . தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை சார்ந்து அரசாணை ( நிலை ) எண் 273 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ( DM 4 ) துறை நாள் 13.08.2020 யில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முறையாக பின்பற்ற வகைசெய்யப்பட்டுள்ளது . கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள் / ஆசிரியர்கள் / ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் , கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு 5.10.2020 அன்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் கோவிட் -19 தொடர்பாக அரசு தற்போது பின்வரும் நிலையான வழிகாட்டு நெறி முறைகளை ( SOP ) வெளியிடுகிறது.
SOP for Health, Hygiene & Safety Protocols for schools Tamil Translation.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...