தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் 6029 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது . உயர்நிலை பள்ளிகளுக்கு 10 கணினிகள் மற்றும் இதர உபகரணங்களும் , மேல்நிலைப் பள்ளிகளுக்கு 20 கணினிகள் மற்றும் இதர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றின் அச்சத்தினால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு தற்போது நாளை 19.01.2021 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . எனவே அனைத்து பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களும் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளதா என உறுதிபடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக L & T நிறுனத்தால் சார்ந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள Field Engineers யிடம் தகவல் தெரிவித்து உடனடியாக சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயாராக இருப்பதை உறுதி செய்திட சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு: மாவட்ட வாரியாக Field Engineers விபரப் பட்டியல் :
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...