தேசிய
பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள்
முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19)
செயல்பட உள்ளார்.
ஜனவரி 24-ஆம் தேதி உத்தரகண்டின்
கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து
இவர் பணியாற்ற உள்ளார். அப்போது, அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் இவர்
ஆய்வு செய்கிறார்.
வாழ்நாளில்
யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ள பிஎஸ்.சி. மூன்றாம் ஆண்டு
மாணவியான ஸ்ரீஸ்தி இது பற்றி கூறுகையில், இது உண்மையா என்று இதுவரை என்னால்
நம்பமுடியவில்லை. நான் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். ஆனால் அதே சமயம்,
மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது இளைஞர்கள் மிகச் சிறந்த
முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எனது சிறந்தப்
பணியை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை இவர் ஆய்வு செய்யவிருக்கிறார்.
2018-ஆம்
ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான
சட்டப்பேரவையில் ஸ்ரீஸ்திதான் முதல்வராக இருந்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...