Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீங்கள் உரிமை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்கள் தகவலை நவீன உலகம் திருடும் என்பதை மறக்க வேண்டாம்.

images%2528115%2529

புதிய வாட்ஸ்அப் சட்டத்தை பார்த்து பலர் வாட்சப்பில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.  

                       உண்மையில் இது புதிதல்ல, இதுவரை சொல்லாமல் செய்ததை இப்போது சொல்லிவிட்டு செய்கிறார்கள்.....

            அவ்வளவே......


#நீங்கள்_ஒட்டுக்_கேட்கப்படுகிறீர்கள்🦻

ஆம் நம்பவில்லையா இதோ நான் கூறும் வழிமுறையில் அதனை சோதித்துப் பாருங்கள்..


#ஆய்வுமுறை1

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு ''டிஜிட்டல் கேமரா'' மாடலை பற்றி வாட்ஸ் அப்பில் எழுத்து வடிவில் விவாதியுங்கள். சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்....  அந்த கேமரா மாடல் விளம்பரம் வரும்.


#ஆய்வுமுறை2

நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலை பற்றி தொலைபேசியில் குரல் வழியாக விவாதியுங்கள்.....  சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்....  அந்த மொபைல் மாடல் விளம்பரம் வரும்...


#ஆய்வுமுறை3

நீங்கள் ஒரு பெரும் வணிக கடைக்கு முன்பு சிறிது நேரம் நில்லுங்கள்.. உதாரணத்திற்கு பிக் பஜார் போன்ற கடைகளில் நில்லுங்கள்..... சிறிது நேரம் கழித்து நீங்கள் முகப்புத்தகம் போனால்.. அந்த கடையின் விளம்பரம் வரும்...


#ஆய்வுமுறை4

உங்கள் கணினியில் ஒரு பொருளை தேடுங்கள்.‌... உதாரணத்திற்கு கைகடிகாரம்.... சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்....  அந்த கைகடிகாரம் விளம்பரம் வரும்... அதாவது கணினியில் தேடியது கைபேசியில் வரும்


#ஆய்வுமுறை5

இதுதான் உச்சகட்டம்... உங்கள் கைப்பேசியை லாக் செய்து மேசையில் வைத்து விடுங்கள்.... நீங்களும் உங்கள் நண்பரும் ஒரு மேசையில் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உதாரணத்திற்கு வாகனம் பற்றி பேசுங்கள்... சிறிது நேரம் கழித்து நீங்கள் உங்கள் கைப்பேசி முகப்புத்தகம் போனால்.. அந்த வாகன விளம்பரம் வரும்....


#ஆய்வுமுறை6

இது இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது.. சோதனையில் பெரிய அளவு வெற்றி காண இயலாது.. இருந்தாலும் முயலுங்கள்.. கையில் கைபேசியை கேமரா எதிரில் நிற்பவரை பார்க்கும்படி வைத்து அவர்களிடம் முதல்முறை பேசுவது போன்று பேசுங்கள்.. அவர் உங்கள் நட்பு வட்டத்தில் இல்லாமலிருந்தால்.. சிறிது நேரத்தில் ரெகமெண்டெட் நண்பர்கள் என்ற தலைப்பில் முகப்புத்தகத்தில் அவர் பெயரை படத்தை உங்களுக்கு முகப்புத்தகம் பரிந்துரைக்கும்...


அது எப்படி ஒட்டுக்கேட்கும் என்று நீங்கள் நினைக்கலாம், உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் அலெக்சா இருக்கிறது என்றால், அதனை நீங்கள் அலெக்சா என்று அழைத்தவுடன், உங்களிடம் பேசத் தொடங்கும். ஆனால் அதுவரை உங்களோட அனைத்து வார்த்தைகளிலும் ''அலெக்சா'' என்ற வார்த்தை இருக்கிறதா, இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்து கொண்டே இருக்கும்..


ஆக உங்களின் எழுத்து கண்காணிக்கப்படுகிறது.... உங்களின் தொலைபேசி உரையாடல் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் செல்லும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.. தொலைபேசியை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் பேசும் வார்த்தைகள்.. தொலைபேசியில் இருக்கும் கேமரா என அனைத்தும் உங்கள் அனுமதியின்றி உங்களை வியாபாரப் பொருளாக்கி கொண்டிருக்கிறது


இதனை செய்வது எந்த ஒரு தனிநபரும் அல்ல.. Ai கணினி நுண்ணறிவு என்று சொல்லப்படும் ''ஆர்டிபிசியல் இன்டல்லைஜன்ஸ்''  வியாபார நோக்கில் செய்யும் தகவல் பகுப்பாய்வு...


இதற்கும் நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசியின் தயாரிப்பாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை


உதாரணத்திற்கு ஆப்பிள் தொலைபேசியாக இருந்தாலும் அண்ட்ராய்டு தொலைபேசியாக இருந்தாலும் இது இப்படித்தான் செயல்படும்..

       காரணம் இது நீங்கள் பயன்படுத்தும் செயலிக்கு கொடுக்கும் உரிமை. நீ எனது கைப்பேசியின் கேமராவை பயன்படுத்திக்கொள்ளலாம் எனது கான்டக்ட் பட்டியலை பயன்படுத்திக்கொள்ளலாம் என் கைபேசி மைக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது நாம் கொடுக்கும் அனைத்து உரிமை தான் இதற்கு அடிப்படை.....


நீங்கள் உரிமை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உங்கள் தகவலை நவீன உலகம் திருடும் என்பதை மறக்க வேண்டாம்....


இறைவனுக்கு மனிதன் அஞ்சி இருந்தான் காரணம் அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நம்பி இருந்ததால் இப்போது அந்த உருவத்தில் கணினி நுண்ணறிவு நம்மை சூழ்ந்து இருக்கிறது.. இறைவன் காப்பவன் என்றால் இது நம்மை வணிக உலகத்துக்கு இரையாக்கும் ஓர் பொறி.





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive