Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6 நாட்கள் வேலை, சிறப்பு வகுப்புகள் கூடாது - திறக்கும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

Tamil_News_large_268928420210113213818

தமிழகத்தில், வரும், 19ம் தேதி முதல், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 'பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்; விருப்பம் இல்லாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டி நடைமுறைகளை, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

@@தமிழகத்தில், 10 மாத இடைவெளிக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. வரும், 19ம் தேதி முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், கல்வி மாவட்டம் வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அதிகாரிகளால், நேற்று நடத்தப்பட்டது. இதில், பல்வேறு அறிவுரைகளும், வழிகாட்டி நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:

* அனைத்து மாணவர்களும், முக கவசத்துடன் மட்டுமே வர வேண்டும்...

* பள்ளி வளாகத்தில் நுழையும் போது, கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை சுத்தம் செய்த பின்பே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

* மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவர்களை அனுமதிக்கக் கூடாது.

* பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும். மதிய உணவு எடுத்து வர அனுமதி வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில், மரத்தடியில் பாதுகாப்பான சூழலில் வகுப்புகளை நடத்தலாம். மாணவர்களிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

* அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோரின் விருப்பம் பெற்ற பின்னரே, பள்ளிக்கு வர வேண்டும். அவர்களின் எழுத்துபூர்வமாக ஒப்புதல் கடிதம் எடுத்து வர வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை, பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது.

* மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து, அச்சம் ஏற்படுத்தக் கூடாது. வாரத்தில், ஆறு நாட்கள் வகுப்பு நடத்தி, தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, 'கவுன்சிலிங்' நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன்பின்னரே, பாடம் நடத்த வேண்டும்.

* வளாகங்களில் ஒன்றாக கூடுவது, விளையாடுவது போன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. மாலை, காலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

* அனைத்து பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்றுத் தரும், அனைத்து ஆசிரியர்களும், 100 சதவீதம் பணிக்கு வர வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பாடங்களை நடத்தினாலும், மற்ற ஆசிரியர்கள், பள்ளி சுமூகமாக இயங்க தேவையான பணிகளை பார்க்க வேண்டும்.இவ்வாறு, வழிகாட்டி நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive