Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய 3 மாத பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கடைசி தேதி 20 ஜனவரி 2021!

விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும்போது கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து வருபவராகவும் இருத்தல் வேண்டும். பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) தமிழை ஒரு பாடமாக கற்றவராகவும் இருத்தல் வோர்டும்.

பயிற்சியின் நோக்கம்:

நீல அளவை செய்வதற்கான உரிமம் பெற்றவர் களை aflu நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தகுதியுடையோருக்கு நில அளவைப் பயிற்சி அளித்து உரிமம் வழங்குதல் , இப்பயிற்சி பெறுவோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை ஏதும் வழங்கப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், நில அளவை உரிமம் பெறுவோருக்கு வேலைவாய்ப்போ அல்லது ஊதியமோ வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் வழங்கப்படமாட்டாது

பயிற்சி விவரம்

பயிற்சிக் காலம் 3 மாதங்கள்

முதல் இரனாடு மாதங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு நில அளவைப் பயிற்சி நிலையத்தில் பாரம்பரிய நில அளவை கருவிகளான சங்கிலி நேர் கோணகட்டை (ம) கோணமானி ஆகியவற்றைக் கொண்டும், நவீன நில அளவைக் கருவிகளான பூகோள நிலைக்கலன் மற்றும் மின்னணு நில அளவைக் கருவி ஆகியவற்றைக் கொண்டும் பயிற்சி அளிக்கப்படும். மூன்றாவது மாதத்தில் மறுநில அளவை / நகர நில அளவை நடைபெறும் மாவட்டங்களுள் ஒன்றில் புலப்பணி மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்தபின்னர் “நில அளவை செய்வதற்கான உரிமம்" வழங்கப்படும்

பயிற்சிக் கட்டணம்

ரூ.30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்). இத்தொகை எக்காரணம் கொண்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது, உறைவிடம், உண்டி மற்றும் பயன் கட்டனாங்களை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் களே ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்பயிற்சிக் சுட்டணத்தினை விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு பயிற்சிக்கு அழைக்கப்படும் போது செலுத்த வேண்டும்.

மேலும் விவரமாக தெரிந்து கொள்ள

Click here to download pdf





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive