சி.எம்.டி.ஏ.,வில், அமைச்சு மற்றும் தொழில்நுட்ப பணியிடங்கள் உள்ளன. இதில், 22 பிரிவுகளில், 171 பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி தேர்வு, 2015ல் அறிவிக்கப்பட்டது.வயது வரம்பு மற்றும் பணி விதி சிக்கல் காரணமாக, இதற்கான அறிவிக்கை, 2018 பிப்., 6ல் ரத்து செய்யப் பட்டது. இதையடுத்து, 2020 பிப்ரவரி, 8ல், ஐந்து பிரிவுகளில், 131 பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கு, தமிழகம் முழுதும் இருந்து, 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, களபணியாளர், மெசேஞ்சர் எனப்படும், செய்தியாளர் பணிக்கு, 18 ஆயிரம் பேரும், பிற பணியிடங்களுக்கு, 39 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக, இதன் தொடர் நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், இந்த விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு, நேர்முக தேர்வு பணிகள் துவங்கி உள்ளன.சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமைத்து, கள பணியாளர், செய்தியாளர் பணிக்கான நேர்முக தேர்வுகள் நடந்து வருகின்றன. அடுத்தபடியாக, இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, இன்று நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...