தென்காசி, மதுரை, நீலகிரி மாவட்டங்களில், மூன்று அரசு மேல்நிலை பள்ளிகளில், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், 5.81 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வக கட்டடங்கள், கழிப்பறை கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளன
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1.68 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை, நூலக அறை, கம்ப்யூட்டர் அறை மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும், முதல்வர் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
சாதித்தோருக்கு வாழ்த்து கடந்த, 2019 ~ 20ம் ஆண்டிற்கான, தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டி, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்தது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வாஸ், கருவி இசைப்பிரிவிலும்; வசந்த், வண்ண ஓவியம் தீட்டுதல் பிரிவிலும், முதல் பரிசு பெற்றனர். பெண்களுக்கான கருவி இசை பிரிவில், அம்சவர்த்தினி மூன்றாம் பரிசு பெற்றார்.மூன்று மாணவர்களும், நேற்று முதல்வரை சந்தித்து, பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் சண்முகம், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...