ஆதரவற்ற மாணவியை தத்தெடுத்ததோடு அவரது டாக்டர் கனவையும் நிறைவேற்றுவதாக ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா உறுதி அளித்துள்ளார்
தென்னிந்திய திரைத்துறையின் நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஆதரவற்ற மாணவி ஒருவரை தத்தெடுத்துள்ளார்.
அதோடு அந்த மாணவியின் மருத்துவ லட்சிய கனவையும் நிறைவேற்றுவதாக உறுதி ஏற்றுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சிகப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பகுமாரி.
ஆதரவற்ற மாணவியான அவர் திருப்பதியில் உள்ள பெண் குழந்தைகள் நல மையத்தில் தங்கி மேல்நிலைப்பள்ளிக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.
மருத்துவராக வேண்டுமென்ற லட்சியம் கொண்ட அவர் நீட் தேர்விலும் தகுதி பெற்றுள்ளார். இருப்பினும் பொருளாதார சிக்கலினால் மருத்துவ கல்லூரியில் சேர உதவி கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அறிந்து கொண்ட ரோஜா தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாளான இன்று (21/12/20) அந்த மாணவியை தத்தெடுத்து, அவரது டாக்டர் படிப்பிற்கு தேவையான மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி ஏற்றுள்ளார்.
MLA ரோஜாவிற்கு நன்றி சொல்லியதோடு மருத்துவரானதும் ஏழை மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...