எல்ஐசி நிறுவனத்தின் பொன்விழா கல்வி உதவித் தொகைதிட்டம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகைவழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
60 சதவீதம் மதிப்பெண்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொன்விழா குழுமம் சார்பில், 2019-20-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம்வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் தேர்ச்சிபெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு அகில இந்திய அளவில் கல்வி உதவித் தொகை வழங் கப்படவுள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் ஒவ்வொரு கோட்டத்திலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற தலா 10 மாணவ, மாணவியர் என மொத்தம் 20 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும்,எல்ஐசியின் ஒவ்வொரு கோட்டத்திலும் 10 சிறப்பு கல்வி உதவித் தொகை, 10, பிளஸ் 2 முறையில் பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவம், பொறியியல், அனைத்துப் பட்டம், பட்டயக் கல்வி மற்றும் அரசு அங்கீகரித்த கல்லூரி, கல்வி நிறுவனங்கள், ஐடிஐ தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பம்
இந்த உதவித் தொகையைப் பெற இணையதளத்தின் மூலம்வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்கள், பிற தகுதிகள் குறித்து அறிவதற்கும் விண்ணப்பிப்பதற்கும் www.licindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என எல்ஐசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...