
மாநில கணக்காயரின் கடிதம் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. அக்கடிதத்தில் பொது வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் தங்களது கைபேசி எண்ணினை www.agae.tn.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட தகவலினை தங்களது மாவட்டங்களில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து அலுவலகங்கள் மற்றும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...