மத்திய ஆயுதப்படை பிரிவு அதிகாரிகளுக்கான தேர்வில் 1,302 பேர் ஆப்சென்ட் ஆகினர். 690 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மத்திய ஆயுதப்படை பிரிவின் (சிஆர்பிஎப்) கமாண்டருக்கான தேர்வு நேற்று நடந்தது
. மதுரையில் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா பள்ளி, என்எம்ஆர். சுப்புராம் கல்லூரி, நாய்ஸ் மெட்ரிக் பள்ளி, டான்பாஸ்கோ பள்ளி ஆகிய 5 மையங்களில் காலை 10 முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 முதல் 4 மணி வரை என இருபிரிவாக தேர்வு நடந்தது.
மதுரையில் இத்தேர்வு எழுத 1,992 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 690 பேர் மட்டுமே எழுதினர். 1,302 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகர் ஆகியோர் கண்காணித்தனர்.
தேர்வை கண்காணிக்க தேர்வாணையத்தில் இருந்து கணக்கு அலுவலர் உமேஷ் பால்சிங் மதுரை வந்திருந்தார். அவரும் தேர்வு மையத்தை கண்காணித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...