மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணையம் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து பொதுத்தேர்வுகள் குறித்த குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.
அதேநேரம் 10 மற்றும் பிளஸ் 2வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. தொடர்ந்து தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தொற்று காரண மாக நீட்டிக்கப்பட்ட விண்ணப் பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் (டிச.9) நிறைவடைகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை நாளை (டிச.10)முதல் 14-ம் தேதி வரை மேற்கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல்விவரங்களை cbse.nic.in என்றஇணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...