Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு


தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது.
 இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில் கூறப்பட்டிருப்பதாவது:
 ''நாடு முழுவதும் 2020-21 ஆம் கல்வி ஆண்டில் செப்டம்பர் - அக்டோபர் பருவத்துக்கான திறந்த நிலை, இணைய வழி மற்றும் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நவ.30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் டிச.31-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.


 இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை, தொடர்புடைய உயர் கல்வி நிறுவனங்கள் 2021 ஜனவரி 15-ம் தேதிக்குள் யுஜிசி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.''
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive