அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் செல்வம் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது:
கொரோனா காலத்திலும் அரசு துறை ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துஉள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் போகலுார் ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என -----நிர்வாகிகள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி படம் வைக்க வேண்டும் என பி.டி.ஓ., தெரிவித்துஉள்ளார்.
ஆனால் ------- அலுவலர்களை தாக்க முயன்று, அரசு வாகனத்திலுள்ள முத்திரையை அவமரியாதை செய்தது கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணி செய்திட பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...