இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு நிகழாண்டில், மொத்தம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையில், தகுதியான 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, அதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிவா் புயல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும், நிகழாண்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 கல்லூரிகளுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...