கணக்கெடுப்பு நடத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் , கருத்தரங்கம் உள்ளிட்டவை நடத்த நீதிபதி குலசேகரன் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஏ.குலசேகரன், ஆணையத்தின் தலைவராக கடந்த 21-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இவ்வாணையம் முதல் செயல்பட தொடங்கி உள்ளது. புதிய அலுவலகத்தில் நீதிபதி குலசேகரன் தனது பணியை தொடங்கினார். பின்னர் நீதிபதி குலசேகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை எந்த அடிப்படையில் செய்தால் அதனை விரைவாகவும், சரியான முறையிலும் முடிக்க முடியும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அத்துடன், கடந்த 1970-ம் ஆண்டு நடத்தப்பட்ட சட்டநாதன் ஆணையம் மற்றும் 1985-ம் ஆண்டு அம்பாசங்கர் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அத்துடன் கருத்தரங்கம் நடத்தி சாதிவாரியான புள்ளி விவரங்களை பெறவும் திட்டமிட்டுள்ளோம். தேவைப்படும்பட்சத்தில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்துள்ளோம் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை 6 மாதத்துக்குள் முடித்து ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...