இப்போ இதுதான் ட்ரெண்ட்… ஆடைகளாக மாறும் சாக்குப் பைகள்!
சாக்குப் பைகளை வைத்து தயாரிக்கப்படும் ஆடைதான் தற்போது ட்ரெண்டில் இருக்கிறது.
காலம் செல்ல செல்ல ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஆடைகள் வர ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு ஆடையிலும் புதுமையை புகுத்தி வாடிக்கையாளர்களை எளிதில் கவர்ந்து விடுகின்றனர். அதிலும் வித்தியாசமான ஆடைகளுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கறையுடன் கூடிய டிரஸ், கிழிந்த டிரஸ்தான் ஃபேஷன் என சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு தற்போது புதிய டிரஸ் அறிமுகமாகியுள்ளது.
அதாவது நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சாக்குப் பைகளே ஆடைகளாக மாறுகின்றன. இவை பல்லாயிரம் விலைக்கு விற்கப்படுவது கூடுதல் ஆச்சரியம்தான். இதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், சாக்குப் பைகளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகள் கூட இந்த ஆடையில் அப்படியே இருக்கின்றன. அதில் உள்ள தையல் கூட வெள்ளை நூலில் பெரிது பெரிதாக இருக்கிறது. ஒரு சாக்குப் பையையே மாட்டிக் கொண்டது போன்ற ஒரு உணர்வுதான் இருக்கும்.
இதனை வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ’இதெல்லாம் ஒரு டிரஸ்ஸா?’ என சிலரும் ‘வித்தியாசமா சூப்பரா இருக்கே’ என சிலரும் கலவையாக விமர்சித்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...