மத்திய அரசு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட படிப்புகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வந்தது. இதில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமாகவும், மாநில அரசின் பங்கு 40 சதவீதம் என்ற அடிப்படையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2020-21ம் கல்வி ஆண்டுக்காக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை ரூ.2,110 கோடிக்கு பதிலாக, ரூ.584.44 கோடி மட்டுமே மத்திய அரசின் பங்காக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என்ற உதவித் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை நிறுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே நிலுவையில் இருக்கும் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...