Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.


"தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வியாண்டில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர்.


ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து 2020-2021ஆம் கல்வியாண்டில் செயல்படுத்துகிறது. இந்த ஆண்டு 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 மாணவர்கள், 3 லட்சத்து 6,710 மாணவியர், என மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்வர் இன்று 9 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்".








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive