நிவர், புரேவி புயலைத் தொடர்ந்து தற்போது தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வரும் வட கிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும். வங்கக் கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட சில புயல்கள் கடும் சேதங்களை ஏற்படுத்தி இன்னும் பேசப்படும் நிலையில் இருக்கின்றன.
அந்த வகையில் கடந்த வாரம் கரையைக் கடந்த நிவர் புயல் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிவர் புயல் தரையைத்தொட்ட நிலையில், வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வலுப்பெற்ற புரெவி புயல் இலங்கையை கரையைக் கடந்த நிலையில், பாம்பணை நோக்கி நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் இன்று இரவு புரேவி புயல் கரையை கடந்தாலும், தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டமான சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்னும் என்ன மாதிரியான பாதிப்பை தரப்போகிறது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புரெவி புயல் கரையை கடந்த பிறகே, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது தெரியவரும். பொதுவாக தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தம் உருவானால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்பதுடன் புயலாக மாறினால் பலத்த சேதத்தையும் விளைவிக்கும்..இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை வழியாக கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...