:
"காலனி ஆட்சிக் காலத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான கல்வி உரிமைப் போராட்டத்தை அம்பேத்கர் முன்னெடுத்தார். இதன் பலனாக பள்ளிப் படிப்புக்கு மேல் படிப்புக்காக நிதியுதவி செய்திட 'போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை' என்ற சிறப்புத் திட்டத்தை 1943ஆம் ஆண்டு காலனி ஆட்சி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அமைந்த அரசுகளும் அமலாக்கி வந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பிரிவினரும் போராடி உதவித்தொகை திட்டத்தைப் பெற்று வந்தனர்.
சமூக நீதி அமலாக்கத்தில் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் முக்கியப் பங்காற்றி வந்த நிலையில், மனுதர்மம், மனுஸ்மிருதி, சனாதானக் கொள்கைகளைச் செயல்படுத்தும் முயற்சியில் பாஜக மத்திய அரசு, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிடுவது என முடிவு எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உயர்சாதியினரில் பொருளாதார நிலையில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்று வருபவர்களையும் சேர்த்து, அனைத்து சமூகப் பிரிவினரும் உள்ளடங்கிய புதிய திட்டம் உருவாக்கி வருவதாகவும் தெரியவருகிறது.
மத்திய அரசின் புதிய திட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினரின் கல்வி உரிமையை அடியோடு பறிக்கும் சதிச்செயலாகும்.
மத்திய, மாநில அரசுகள் சமுக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட்டு, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது".
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...