தமிழகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை என்.கே.ஹேமலதா பற்றி அறிந்தேன். விழுப்புரத்தில் ஒரு பள்ளியில் பழமையான தமிழ் மொழியைக் கற்பித்து வருகிறார்.
கரோனா வைரஸ் காலத்தில்கூட தனது கற்பிக்கும் திறனில் தடைகள் ஏற்படாமல் வித்தியாசமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தியுள்ளார். சவால்கள் நிச்சயம் நமக்கு இருக்கும். அதை நாம் புத்தாக்கமான வழியில் எதிர்கொள்ள வேண்டும்.
ஆசிரியை ஹேமலதா பாடத்தின் 53 பிரிவுகளையும், விலங்குகளைக் கொண்ட வீடியோவாக மாற்றி, அதே பென் டிரைவில் பதிவேற்றம் செய்து, மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த வசதி மாணவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. பாடங்களை வீடியோ மூலம் மாணவர்கள் கற்றுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களையும் தொலைபேசி வாயிலாக மாணவர்களுக்குத் தீர்த்து வைத்துள்ளார். இதுபோன்ற கல்வி, மாணவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை மத்திய அரசின் தீக்ஸா தளத்தில் பதிவேற்றம் செய்தால் தொலைதூரத்தில் இருக்கும் மாணவர்கள் அதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்''.
Mam how can I contact you...I need some ideas regarding teaching
ReplyDeleteGood madam
ReplyDelete