வருமான வரிப் பிடித்தத்தில் கூடுதல் தொகையை திரும்ப பெறலாம் என்று வரும் செய்தி வதந்தி என்று வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
பொது முடக்கத்தால், பலர் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வரும் நிலையில், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படுவதாக செய்திகள் மூலம் மோசடி முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக வருமான வரித் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற எந்த திட்டமும் இல்லை என்றும், அந்த தகவல்கள் வதந்தியே என்றும் மறுப்பு தெரிவித்துள்ள வருமான வரித்துறை, குறிப்பிட்ட இணையதள லிங்கை, கிளிக் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. பணம் பறிக்கும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருமான வரி கட்டி இருப்பதால் சற்று கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற மெயில்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருமான வரி கட்டி இருப்பதால் சற்று கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற மெயில்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...