'சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள். இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று.சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்பது குறித்து, முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
ReplyDeleteஇவர்கள்
பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது
ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்