அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.500 ஆக உயர்த்த நாளை கடைசி நாள்அஞ்சல்துறை அறிவிப்பு
அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.500 ஆக உயர்த்த நாளை கடைசி நாள் என்று அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆக இருந்தது. இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.
எனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்கு டிசம்பர் 11-ந் தேதி (நாளை) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில், மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100 ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு, இருப்புத்தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...