பழைய மற்றும் புதிய வரி கணக்கீட்டு முறையில் ஆண்டு வருமானம் ரூ 5 இலட்சத்திற்குள் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை.
ஏனெனில் பழைய கணக்கீட்டு முறையில், அனைத்து வித கழிவுகளுக்கு பிறகு, Total Taxable Income ல், ரூ 5 இலட்சத்திற்குள் இருந்தால், முதல் 2.5 L க்கு வரி இல்லை. அடுத்த 2.5 L க்கு 5 % வரி ரூ 12,500 வரும்.
ஆனால் வருமான வரிச் சட்டம் 87A ன் படி, இந்த தொகைக்கு
(ரூ 12,500), வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இதே வருமான வரிச் சட்டம் 87 A ன் படி, புதிய கணக்கீட்டின் படியும், ரூ 5 இலட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கான வரி ரூ 12,500 க்கு, வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ரூ 5,00,001 க்கு மேல் வருமானம் வந்தால், பழைய முறையில் கழிவுகளை பயன் படுத்தி வரிச் சலுகைகளை பெற முடியும்.
ஆனால் புதிய முறையில் சலுகைகள் எதுவும் கிடையாது.
கீழ்க்கண்ட மாதிரி கணக்கீட்டு விவரங்களைப் பார்த்தாலே தெளிவாக புரியும்.
தகவல் பகிர்வு: லாரன்ஸ், திருச்சி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...