புதுச்சேரியில் திட்டமிட்டபடி ஜனவரி 4-ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். அதன்பின்னரே சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரி வித்துள்ளது.
கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பலகட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகுகடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக பெற்றோர் அனு மதியுடன் 9, 10, 11 மற்றும் 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு சந்தே கங்களை தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜனவரி 4-ம் தேதிமுதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் நடைபெறும். பெற்றோர் ஒப்புதலுடன் விருப்பமுள்ள மாணவ,மாணவிகள் பங்கேற்கலாம். வருகைப் பதிவேடு கட்டாய மில்லை. அதைத்தொடர்ந்து ஜன வரி 18-ம் தேதி முதல் முழுநேரமும் பள்ளிகள் செயல்படும் என கடந்த 16-ம் தேதி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார். அமைச்சர் அறிவித்தபடி பள்ளிகள் திறப்புக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா? பள்ளிகள் திறக்கப்பட்டால் கிராமப்புற மாணவர்கள், வெகு தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் நகர்ப் புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்ல போதிய போக்கு வரத்து வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாக நேரிடும். எனவே,பள்ளிகள் திறக்கும் வேளையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்ப டுமா? உள்ளிட்ட பல்வேறு சந்தே கங்கள் பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கூறும்போது, ‘‘ஜனவரி 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும். அரை நாள் வகுப்புகள் நடைபெறும். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம். வருகைப்பதிவு கிடையாது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம்உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படும். கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்யவும், வகுப்பில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி திறப்புக்கு பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...