மேற்கு வங்கத்தில் +2 மாணவர்களுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் வாங்குவதற்கு அரசு சார்பில் ரூ.10000 வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழிக் கல்வி தொடர்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் ஆன்லைன் வழிக் கல்வியே தொடருகிறது.எனினும், ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வழிக் கல்வி பெறுவதற்கான வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இந்நிலையில், வசதி வாய்ப்பற்ற மாணவர்கள் ஆன்லைன் வழியில் கல்வி பெற வழிவகை செய்வதற்காக ஸ்மார்ட்போன் வாங்க பணம் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் +2ஆம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டேப் வாங்குவதற்காக தலா 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல்போன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று வாரங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகவே பணம் அனுப்பப்படும். அவர்களுக்கு தேவையான ஸ்மார்ட்போன் அல்லது டேப் வாங்கிக்கொள்ளலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் மிகவும் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Other status liyum idhey idea va use pannalam
ReplyDelete