தமிழகத்தில், 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மேலும், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக மருத்துவக் கல்லூரி துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, தலா, ௪௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மருத்துவ கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கல்லுாரிகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மருத்துவ கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது:
தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, 2019 -- 20ம் கல்வியாண்டில் அனுமதி கிடைத்தது. மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், கல்லூரிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன.மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.
மருத்துவப் உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து வித அடிப்படை மற்றும் முக்கிய சான்றிதழ்கள், தேசிய மருத்துவ ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர், நேரில் ஆய்வு செய்த பின், அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி சான்றிதழ் கிடைத்த பின், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...