தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,96,475 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொற்று எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1,311 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 7,74,306 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11,870 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறிநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. !மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் கள்ளக்குறிச்சி, திருவாரூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...