புதுடில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடம், 93 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த பழைய கட்டடத்தில், இடப்பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, பார்லிமென்ட்டுக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது.பழைய கட்டடம் அருகிலேயே புதிய கட்டடத்துக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில், 64 ஆயிரத்து, 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய பார்லி., கட்டடத்தை, குஜராத்தை சேர்ந்த, 'ஹெச்.பி.சி., டிசைன்ஸ்' என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
கட்டட கட்டுமான பணிகள், 'டாடா ப்ராஜெக்ட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை, வரும், 10ம் தேதி நடக்கிறது.இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின், கட்டுமான பணிகள் முழு வீச்சில் துவங்கி, 2022ல் புதிய கட்டடம் தயாராகிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிய கட்டடம், நான்கு மாடிகளுடன், ஆறு நுழை வாயில்களுடன் கட்டப்படுகிறது. லோக்சபா, 1,145 சதுர மீட்டரில், 888 இருக்கைகளுடனும், ராஜ்யசபா, 1,232 சதுர மீட்டரில், 384 இருக்கைகளுடனும் கட்டப்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...