சேலம், :நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சமாக ரூ.91ஐ எட்டியுள்ளது. தமிழகத்தில் ரூ.87 ஆக அதிகரித்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.கடந்த ஜனவரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹85 ஆக இருந்தது. பிறகு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் இறக்குமதியை பல்வேறு நாடுகள் குறைத்து கொண்டன. இதனால் உலக நாடுகள், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை வெகுவாக குறைத்தன. ஆனால், இந்தியாவில் மட்டும் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மத்திய, மாநில அரசுகள் தங்களின் கலால் வரி உயர்வுக்கு பயன்படுத்தி கொண்டன.
இதனால், கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், பெட்ரோல் விலையை ₹82 முதல் ₹84 என்ற நிலைக்கும், டீசல் விலையை ₹74 முதல் ₹76 என்ற நிலைக்கும் நிலையாக வைத்து கொண்டனர்.
இச்சூழலில் ஆகஸ்ட்டில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தும் முடிவுக்கு எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வந்தது. அதன்படியே கடந்த செப்டம்பர் 15ம் தேதி வரையில் பெட்ரோல், டீசல் விலையை பைசா கணக்கில் உயர்த்தியது. பிறகு பீகார் தேர்தல் வந்ததால், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலையை மாற்றாமல் அப்படியே நிலையாக வைத்தனர்.கடந்த நவம்பர் 20ம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க தொடங்கியது. தினமும் 6 பைசா முதல் 30 பைசா வரையில் அதிகரிக்கப்படுகிறது. இதனால், நாடு முழுவதும் புதிய உச்சத்தை பெட்ரோல், டீசல் விலை தொட்டுள்ளது. 2018, செப்டம்பர் மாதத்தில் மிக அதிகப்படியாக பெட்ரோல் லிட்டர் ₹91க்கு விற்கப்பட்டது. தற்போது அந்த விலையை எட்டி, புதிய உச்சத்தில் இருக்கிறது.
நாட்டில் மிக அதிகபட்சமாக இன்றைய தினம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹91.37க்கு விற்கப்பட்டு வருகிறது. மும்பையில் ₹90.34க்கும், டெல்லியில் ₹83.71க்கும், கொல்கத்தாவில் ₹85.19க்கும், பாட்னாவில் ₹86.25க்கும், ஐதராபாத்தில் ₹87.06க்கும் விற்கப்படுகிறது. நாடு முழுவதும் நேற்றைய விலையில் இருந்து இன்றைக்கு 25 பைசா முதல் 50 பைசா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. '
தமிழகத்தில் தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 25 பைசா அதிகரித்து ₹86.51க்கும் டீசல் ₹79.21க்கும் விற்பனையாகிறது. இதுவே, சேலம் மாவட்ட பகுதியில் பெட்ரோல் 26 பைசா அதிகரித்து ₹86.90க்கும், மாநகர பகுதியில் ₹87.08க்கும் விற்பனையாகிறது. டீசல் விலை ₹24 பைசா அதிகரித்து ₹79.65க்கு விற்பனையாகிறது. நவம்பர் 20ம் தேதி முதல் இன்று (7ம் தேதி) வரை பெட்ரோல் ₹2.33ம், டீசல் ₹3ம் அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தற்போது விலை உச்சத்தை தொட்டுள்ளதால், பொதுமக்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் 15 நாட்களுக்கு நீடித்தால், ஒரு லிட்டர் ₹100ஐ எட்டிவிடும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...