அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பணி நியமிக்கப்பட்டு வருகின்றனர்
கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2011ம் ஆண்டுக்கு முன்பு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமிக்கப்பட்டு வந்தது. இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக பதிவுமூப்பு சரிபார்க்கப்பட்டது. இதன்படி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் | சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது
இவர்களில் சுமார் இருபதாயிரம் பேர் பதிவினை அடிப்படையாகக் கொண்டு கடந்த 201ம் ஆண்டு பணி நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் இவர்களில் 5 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் பணி வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்து வருகின்றனர்
இதுகுறித்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி வாய்ப்பு கிடைக்காத ஆசிரியர்கள் தரப்பில் கூறும் போது, - 2010ம் ஆண்டு பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களில் ஐந்தாயிரம் பேர் தவிர மற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், ஐந்தாயிரம் பேர் மட்டும் பாதிக்கப்பட்டு உள்ளோம். மாநில அரசு பாதிக்கப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...