Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாட்டின் சிறந்த 10 காவல்நிலையங்கள்: 2-வது இடத்தில் தமிழகத்தில் எந்த காவல் நிலையம்?


நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருது பட்டியலில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

நாட்டிலேயே சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதுப் பட்டியலில், சேலம் மாநகரத்தில் அமைந்துள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் இரண்டாம் இடம்பிடித்திருப்பதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களைத் தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களைக் கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டம், ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபடுதல், சமுதாயப் பணிகளில் ஆா்வம் காட்டுதல், குற்றப்பதிவேடுகளை கணினி மூலம் பராமரித்தல், புகாா் அளிக்க வரும் பொதுமக்களை வரவேற்கும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்ட 10 காவல் நிலையங்களின் விவரம்:

1. மணிப்பூர்  - தௌபல் - நோங்போக்செக்மை காவல்நிலையம்

2. தமிழ்நாடு - சேலம் மாநகர் - சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம்

3. அருணாசலம் - சாங்லங் - கர்சங் காவல்நிலையம்

4. சட்டீஸ்கர் - சூரஜ்புர் - ஜில்மிலி காவல்நிலையம்

5. கோவா - தெற்கு கோவா - செங்குயெம் காவல்நிலையம்

6. அந்தமான் - நிகோவார் தீவுகள் - வடக்கு மற்றும் மத்திய அந்தமான் - காலிகட் காவல்நிலையம்

7. சிக்கிம் - கிழக்கு மாவட்டம்  - பாக்யோங் காவல்நிலையம்

8. உத்தரப்பிரதேசம் - மொராதாபாத் - காந்த் காவல்நிலையம்

9. தாத்ரா மற்றும் நாகர் ஹேவேலி - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி - கான்வெல்

10. தெலங்கானா  - கரீம்நகர் - ஜம்மிகுண்டா நகரம் காவல்நிலையம்.

விரைவில் இதற்கான விருதுகள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் பெற்ற விருதுகள்

கடந்த 2017-ஆம் ஆண்டில் நாட்டின் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், கோயம்புத்தூா் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையம் இடம் பிடித்தது. அதேபோல கடந்த 2018-ஆம் ஆண்டு தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் நிலையம் 8-ஆவது சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் 2019-ஆம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில், தமிழ்நாட்டின் தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம் 4-ஆவது இடத்தைப் பிடித்தது. இதன் மூலம் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழக காவல்துறையைச் சோ்ந்த காவல் நிலையங்கள், சிறந்த காவல் நிலையங்களில் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு முறை தேனி மாவட்ட காவல்துறைக்கு கீழ் இருக்கும் காவல் நிலையம், சிறந்த காவல் நிலைய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சிறந்த காவல்நிலையங்களுக்கான பட்டியல்..

1. அந்தமான் அபா்தீன் காவல்நிலையம்

2. குஜராத், மகிசாகா் பாலசினாா் காவல் நிலையம்

3. மத்தியப் பிரதேசம் புா்ஹான்பூா் காவல் நிலையம்

4. தமிழ்நாடு தேனி அனைத்து மகளிா் காவல் நிலையம்

5. அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு அனிணி காவல் நிலையம்

6. தில்லி தென் மேற்கு மாவட்டத்தின் பாபா ஹரிதாஸ் நகா், துவாரகா காவல் நிலையம்

7. ராஜஸ்தானில் ஜலவாா் மாவட்ட பகானி காவல் நிலையம்

8. தெலங்கானாவின் கரீம்நகா் சோப்பதண்டி காவல் நிலையம்

9. கோவா பிச்சோலிம் காவல் நிலையம்

10. மத்தியப் பிரதேசத்தின் சியோபூா் பா்காவா காவல் நிலையம் ஆகியவை தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தன


தேர்வு எப்படி நடக்கிறது?


750க்கும் மேற்பட்ட காவல்நிலையங்கள் இருக்கும் மாநிலங்களில் இருந்து தலா மூன்று காவல்நிலையங்களும், இதர மாநிலங்கள் மற்றும் தில்லியிலிருந்து தலா 2 காவல்நிலையங்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து தலா 1 காவல்நிலையமும் இந்த விருதுப் பட்டியலுக்கு தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதிலிருந்து தேர்வுக் குழுவினரால் 75 காவல்நிலையங்கள் அடுத்த கட்டத்தக்கு தகுதிபெறும்.இறுதித் தேர்வில் தொழில்நுட்பத்தைக் கையாண்டு, குற்றங்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட 19 கட்டமைப்புகள் கவனத்தில் கொண்டு, சிறந்த 10 காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இதனடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், காவல்நிலையத்தின் கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive