Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsappன் 3 மிகவும் ஆபத்தான அமைப்புகள்! உடனே மாற்றிடுங்க!

 


 

வாட்ஸ்அப் இப்போது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது, ஆனால் சில வாட்ஸ்அப் Settings களை மாற்றாமல் விட்டால் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி என்ன ஆபத்து வந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க

உங்கள் வாட்ஸ்அப்பிற்கு மற்றவர்களிடம் இருந்து வரும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தானாகவே சேமிக்கப்படும் அமைப்பு இயக்கப்பட்டிருந்தால், உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும். 

ஏனென்றால், சைபர் நிபுணர்களின் தகவலின்படி, புகைப்படங்கள் சில நேரங்களில் ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan horses) போலவே செயல்படுகின்றன, அவற்றின் உதவியுடன் ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை எளிதாக ஹேக் செய்ய முடியும். 

இதைத் தவிர்க்க, உடனடியாக உங்கள் வாட்ஸ்அப் Settings க்குச் சென்று, Auto Download Media விருப்பத்தை ஆப் செய்து விடுங்கள்.

ICloud இல் வாட்ஸ்அப் செய்திகளை ஒருபோதும் Backup எடுக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் iCloud ஐ அடைந்த பிறகு உங்கள் மெசேஜ்கள் Decrypt செய்யப்படக்கூடும், அதாவது பாதுகாப்பு செக்யூரிட்டி ஏஜென்சிகள் உங்கள் அரட்டைகளை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எடுக்க நேரலாம், அதனால்தான் வல்லுநர்கள் iCloud இல் காப்புப் பிரதி எடுக்க மறுக்கின்றனர்.

மறைந்துபோகும் செய்திகள் அம்சம் என்ற செய்திகளை தானாக நீக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது

ஆனால் தனியுரிமையின்படி, இதுவும் ஆபத்தான அம்சம் தான்.

எடுத்துக்காட்டாக, வாட்ஸ்அப்பில், தானாக நீக்கப்பட்ட இந்த செய்திகள் குறைந்தது 7 நாட்களுக்கு இருக்கும்,

எனவே பிற பயனர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்தி Notification இல் இருக்கும். மேலும், உங்கள் செய்தியைப் பெறும் பயனர் உங்கள் செய்தியை Backup எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும். வேண்டுமென்றால், பாதுகாப்புக்காக, நீங்கள் அனுப்பிய செய்தியை பெறுபவர் படித்ததும் உடனடியாக அரட்டையை நீக்கிவிடுங்கள்.





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive