'
ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம்
வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக , இளைஞர்கள் தங்களது
பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக இந்த
அரசு ஒரு அவசர சட்டத்தை ( Ordinance ) இயற்ற உள்ளது.
இந்த அவசர சட்டம் ( Ordinance ) , 1930 - ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் , 1888 - ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859 - ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிற்கு சட்டதிருத்தங்கள் மேற் கொள்வதன் மூலம் கீழ்கண்ட நோக்கங்களுக்காக இயற்றப்பட உள்ளது :
i ) இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும் அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களை தடை செய்யவும் ;
ii ) இத்தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ .5,000 / - அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கவும் ;
iii ) ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் ( Online gaming house ) வைத்திருப்போர்களுக்கு ரூ .10,000 / -அபராதமும் இரண்டு சிறைத்தண்டனையும் வழங்கவும் ;
iv ) இவ்விளையாட்டில் பணப்பரிமாற்றங்களை இணைய வழி மூலம் மேற்கொள்வது தடுக்கவும் ;
v ) இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் , தண்டிக்கவும் இந்த அவசர சட்டம் ( Ordinance ) வழி வகுக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் , திரு . பன்வாரிலால் புரோகித் அவர்கள் “ ஆன்லைன் ரம்மி ” ( Online Rummy ) போன்ற இணையவழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...