தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு தருவதற்கான தரவரிசை பட்டியல் முதலில் வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 4,061 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. பல் மருத்துவ படிப்பில் 2000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு முதல் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 710 மதிப்பெண்களுடன் திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீஜன் முதலிடம் பிடித்துள்ளார். 705 மதிப்பெண்களுடன் நாமக்கல் மாணவி மோகன்பிரபா இரண்டாம் பெற்றுள்ளார். சென்னையை சேர்ந்த சுவேதா 701 மதிப்பெண்களுடன் 3-ம் இடம் பிடித்துள்ளார்.
முதல் 5 இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்:
7.5%
உள்ஒதுக்கீடு தரவரிசையில் 664 மதிப்பெண்கள் பெற்று தேனியைச் சேர்ந்த
ஜீவித்குமார் முதலிடம் பெற்றுள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர்
அன்பரசன் 646 மதிப்பெண்களுடன் 2-ம் இடம் பிடித்துள்ளார். சென்னையைச்
சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி 3-ம் இடமும், வேலூரைச் சேர்ந்த குணசேகரன் 4-ம்
இடமும் (4-ம் இடம் பிடித்தவர் ஆதி திராவிடர் பள்ளியில் பயின்றவர்),
ஈரோட்டைச் சேர்ந்த பூபதி 5-வது இடமும் பெற்றுள்ளனர்.
நாளை மறுநாள் கலந்தாய்வு:
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (18-11-2020) தொடங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கள் கூறினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கும் என கூறினார். முறைகேடுகளை தடுக்கவே ஆன்லைன் கலந்தாய்வு இல்லை என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...