Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IFHRMS வந்த பிறகு என்னென்ன மாற்றங்கள், என்னென்ன சாதக, பாதகம் உள்ளது?

IFHRMS வந்த பிறகு என்னென்ன மாற்றங்கள், என்னென்ன சாதக, பாதகம் உள்ளது. 1.அரசின் கருவூலத்துறையினை கணினி மயமாக்கும் திட்டம் நல்ல அருமையான திட்டம். 2. அனைவரும் கருவூலம் செல்லாமலேயெ அந்தந்த அலுவலகத்தில் இருந்து பட்டியல் சமர்ப்பிக்கலாம்.3. அடுத்த தலைமுறையினர் ஓய்வு பெறும் போது, ஓய்வு பெறும் அன்றே பணப்பலன்களை பெற ஏதுவாக கருவூலம் இருக்கும். 4. DIGITAL SIGN மூலமாக பட்டியல்களை DDO அனுமதி இல்லாமல் சமர்ப்ப்பிக்க இயலாது. 5.E-SR நடைமுறைப்படுத்தப்பட்ட உடன் பணியாளர்களின் விவரங்களை ஆய்வு செய்வது எளிது. 5. ஓய்வூதியதாரர்களின் பணப்பலன்களை பெறுதல் சுலபம், அவர்கள் கருவூலம் செல்லும் வேலை இல்லை. 6. அலுவலகப் பணியாளர்கள் கருவூலம் செல்லும் வேலை இல்லை 7. காலையில் பட்டியல் சமர்ப்பித்தால் மாலையில் காசாக்கப்படும். 8. அவரவர் SR மற்றும் விடுப்புக்கள், போன்றவற்றினை mobile phone மூலமாக அறிந்துகொள்ளலாம்.9. கையூட்டு பெறுதலும் கொடுப்பதும் தவிர்க்கப்படும். 10. நிதி (Budget) சரியான அளவில் பயன்படுத்தும் போது கூடுதல் நிதிச்சுமை தவிர்க்கப்படும். இவ்வளவு மாற்றங்கள் நல்ல விசயங்கள் இருந்தும் ஏன் IFHRMS செயல்படுத்த ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டம். 1. சர்வர் இயங்கும் நேரம் காலை மாலை என வரைமுறை இல்லாமல் பட்டியல் இடுவது...பெண் ஊழியர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். 2. Wipro team சரியான திட்டமிடல் இல்லாமை. சொல்லப்போனால் அரசு ஊழியர்களின் PAY BAND பற்றிய தெளிவு இல்லாமை. அவர்கள் சொல்வது மட்டுமே சரி என வாதம் செய்வது. அரசாணை எங்கே என்பது. அரசாணையை நாம் காட்டிவிட்டால் ஓர் escaping answer...TICKET ID போடுங்க. 3. இறந்தவர்களின் பணப்பலன்கள் மற்றும் suspension bill, provisional bill போன்றவற்றில் வரக்கூடிய error சரி செய்வதற்கு காலம் தாழ்த்துவது. 4. பல மாவட்டங்களில் உள்ள wipro staff போன் செய்தால் phone எடுபபதில்லை. நேரில் சென்றாலும் சரியான அணுகுமுறை இல்லை. watsapp sms செய்தால் பதில் இல்லை. 5. LOANS AND ADVANCES ல் schedule சரியாக வருவதில்லை. 6. அரசு ஊழியர்களின் விவரங்களை edit செய்யும் option கருவூலத்திற்குக் கூட கிடையாது. 7. AIDED SCHOOLS AND COLLEGES க்கு CPS, SPF, GPF போன்றவற்றிற்கு வேறு DB CODE என்பது அனைவரும் அறிந்ததே...அதை இன்னும் சரி செய்யாமல் common db code ஆக உள்ளது. 8. அலுவலகத்தின் TAN NUMBER, DDO ன் BANK account number add செய்ய முடியாமல் உள்ளது.9. TA & Tour TA போன்றவற்றிற்கு இன்னும் சரியான வழிமுறை இல்லை. 10. Budget பதிவேற்றம் செய்வதற்கு சரியான வழிகாட்டுட்டுதல் இல்லை .இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது மட்டுமே காரணமா?ஏன் அரசு ஊழியரான நாம் இதற்கு காரணம் இல்லையா?
ஒவ்வோர் அலுவலகத்திலும் INITIATOR, VERIFIER, APPROVER போன்றோர் சரிவர தங்களின் பணியினை செய்யாமை, இதிலும் கொடுமை computer centre சென்று பட்டியல் தயாரிப்பது, அரசு ஊழியர் அல்லாதோர் பட்டியல் தயாரிப்பது. இதிலும் கொடுமை IFRMS குழு என்ற மாவட்டந்தோறும் உள்ள குழுக்களில் அரசு ஊழியர் அல்லாதோரை இணைத்து அவர்களுக்கும் தகவல் அளிப்பது. முழு நேரப் பணியாளர் மட்டுமே அரசு ஊழியர், நான் அலுவலகத்தில் temperory , part time ஆக உள்ளேன் என்று உள்ளவர்களிடம் நாம் பொறுப்பை கொடுத்துவிட்டு நம் வேலையினை செய்யாமல் ஒதுங்குவது.வேலை செய்ய தயங்குவது..கஷ்டமோ நஷ்டமோ நாம் தான் இதனை கற்க வேண்டும், புலம்புவதாலும், கோப்படுவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. பணியாளர் அவசரப்படுகின்றார் என்று தவறான வழிக்கு செல்லாதீர்கள். கற்றுக் கொள்ளுங்கள்…ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள நன்கு பணியாற்றக்கூடிய ஆர்வம் உள்ளவர்கள் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள். நமக்கு தெரிந்தால் மட்டும் போதும் என்று எண்ணாதீர்கள். திட்டமிட்டு செயல்படுங்கள்…..மாற்றம் ஒன்றே நிலையானது. மாற்றத்தினை வரவேற்போம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive