தமிழக அரசின், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கு, பயிற்சி பெற விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, பயிற்சி துறை தலைவர் இறையன்பு அறிவிப்பு:
சென்னை, பசுமை வழிச்சாலையில், அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம், 54 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராம பகுதிகளில் உள்ள, ஏழை மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையில், மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
மேலும், முதன்மை தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தமிழக மாணவர்கள், எங்கு பயிற்சி பெற்று, முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இங்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர். இம்மையத்தில் சேர விரும்புவோர், 'www.civilservicecoaching.com' என்ற இணையதளத்தில், நாளை மாலை, 6:00 மணிக்குள், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்தவர்களில், 225 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடிமை பணி முதன்மை தேர்வுக்கு, பயிற்சி தரப்படும். இவர்களில், 140 பேர், இலவசமாக தங்கி படிக்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மீதமுள்ள, 85 பேர், தினமும் வந்து பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...