23 மாநிலங்கள் மற்றும்1 யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 33 சைனிக் பள்ளிகளில் அடுத்த வருடம் ( கல்வியாண்டு 2021-22) 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத்தேர்வு 2021, (ஏஐஎஸ்எஸ்ஈஈ) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி (ஞாயிறு) நடைபெறும்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வுக்காக இணையதளம் வாயிலாகக் கடந்த அக்டோபர் மாதம் இருபதாம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. இந்த மாதம் 19ம் தேதி வரை https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொண்டபின் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மாணவர் சேர்க்கை குறித்த விரிவான தகவல்கள் www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து சைனிக் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் சேருவதற்கு மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். அதே போல வரும் கல்வி ஆண்டு (2021-22)முதல் கிரிமிலேயர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...