தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில், ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு, உணவு, கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
நடப்பாண்டு
மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடந்தது. மூன்று
கால்நடை மருத்துவ கல்லூரிகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக, 120
இடங்கள் ஏற்படுத்தப்பட்டு, கால்நடை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப
படிப்புகளில், 580 இடங்கள் உள்ளன. கால்நடை மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ ~மாணவியரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
மொத்தம்
விண்ணப்பித்த, 15 ஆயிரம் பேரில், 13 ஆயிரத்து, 901 விண்ணப்பங்கள்
தகுதியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.பி.வி.எஸ்சி., பிரிவில், கோவையைச்
சேர்ந்த மாணவி கோகிலா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர், 197.51
'கட்~ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளார்.
தற்போது, பொது மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடந்து வருவதால், இந்த கவுன்சிலிங் முடிந்தபின், கால்நடை படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடக்கும். விரைவில், அதற்கான தேதி அறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...