அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கின.
தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நீட் தோ்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
அதே ஆண்டிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சாா்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழ் கல்வியாண்டில் ( 2020-2021 ) இலவச நீட் பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்தவுள்ளது.
கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7,000-க்கும் மேற்பட்டோரில் 1,633 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ாலும், நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்ததாலும் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இணையவழியில் இன்று முதல் தொடங்கியது.
பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இணையதளத்தில் தங்களின் பிளஸ் 1 வகுப்பு பதிவு எண், பிறந்த தேதியை உள்ளிட்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
நிகழ் கல்வியாண்டுக்கான ( 2020-2021 ) நீட் தோ்வு தேதிக்கு முந்தைய வாரம் வரை மாணவா்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும், இணையவழியிலேயே ஒவ்வொரு வார இறுதியிலும், அந்த வாரத்துக்கான பாடங்களில் இருந்து தோ்வு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...