Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் !!!


*அரசுப் பேருந்துகள் எவ்வளவு காலதாமதமாக வந்தாலும் தொடர் வண்டி குறித்த நேரத்திற்கு வராமல் போனாலும் ஒரு முணுமுணுப்போடு கடந்து செல்கிறது பொது ஜனம் !!!.

*கிராமப்புற சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் வரவில்லை என்றாலும் மக்கள் கோபப் படுவதில்லை, அரசும் நடவடிக்கை பற்றி யோசிப்பதில்லை !!!.*

*கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று மனுவை பக்கத்தில் உள்ள பிள்ளையார் சிலை காலடியில் வைத்து விட்டு போன செய்தியும் படித்தோம் !!!.*

*வங்கி அலுவலர் கவுன்டரை விட்டு எழுந்து போய் அரை மணி நேரம் கழித்தே வந்தாலும், அமைதியாக வாட்ஸ் அப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் !!!.*

*ஆனால் ஆசிரியர் வரவில்லை என்ற காரணத்தினால் இது வரை ஒரு அரசுப் பள்ளி கூட பூட்டிக் கிடந்ததாக வரலாறு கிடையாது !!!.*

*இருப்பினும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு நிமிடம் கூட தாமதமாக வந்து விடக் கூடாது என்பதில் பொது மக்களுக்கும் அரசுக்கும் அதிக அக்கரை இருக்கிறது !!!. அதனால் தான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமல் படுத்துவதில் அவ்வளவு ஆர்வம் !!!. மேலே குறிப்பிட்டுள்ளவர்களை விட ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் உள்ளார்கள் என்று புரிந்து பெருமை கொள்வோம் !!!.

பயோ மெட்ரிக் வருகைப் பதிவை பயன் படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதில்லை என்று நிருபிப்போம் !!!. ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள் என்பதை மட்டும் அரசு உறுதி செய்து விட்டால் போதும், நாடு சுபிட்சம் அடைந்து விடும் !!!. விக்ரம் லேன்டரில் தொடர்பு கிடைத்து விடும் !!!. இந்திய பொருளாதாரம் தூக்கி நிறுத்தப் படும் !!!.

*அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கும் வாய்ப்புள்ளது !!!. பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இலட்சக்கணக்கில் கமிஷன் பெற வாய்ப்புள்ளது !!!. இந்தப் பணத்தை வைத்து அவர்கள் நிறைய சொத்து வாங்குவார்கள் !!!. எனவே ஆசிரியர்கள் மட்டும் அவசியம் தாங்கள் வாங்கிய சொத்துகளை பணிப் பதிவேடுகளில் பதிய வேண்டும். அவர்கள் ஹவுசிங் லோன் போட்டு வாழ்க்கை முழுவதும் டியு (DUE) செலுத்தி கட்டும் ஒரே ஒரு வீட்டை கணக்கில் கொண்டு வந்து விட்டால் நாட்டில் உள்ள அத்தனை கருப்பு பணமும் ஒழிந்து விடும் !!!.*

*மடியில் கனம் இல்லை !!! வழியில் பயமுமில்லை நமக்கு !!!. இதையும் நமக்கு அளிக்கப் படும் வெகுமதியாக நினைத்து மகிழ்வோம் ஆசிரியர் நண்பர்களே !!!*

*நாடே அக்கரையுடன் உற்று நோக்கும் ஆசிரியர் இனத்தின் ஒரு அங்கத்தினர் என்ற பெருமையுடன்.............!!




2 Comments:

  1. இங்கே தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலையோ பரிதாபம். அவர்களை ஏதோ அடிமைகள் என்று பள்ளி நிர்வாகங்களும் சமூகமும் நினைக்கிறது

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive