அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்திப் பெற்றோர்களும் மாணவ, மாணவியரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக அமெரிக்காவில் அவ்வப்போது கல்வி நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
ADVERTISEMENT
நியூ யார்க் பள்ளிகள் அனைத்தும் வியாழக்கிழமை முதல் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என மேயர் வெளியிட்ட அறிவிப்புக்குப் பெற்றோரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாணவ, மாணவிகளுடன் போராட்டங்களில் ஈடுபட்ட பெற்றோர், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்றும் மதுவருந்தும் பார்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பள்ளிகள் பாதுகாப்பானவை, பள்ளிகளை மூடியே வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...