தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்காக, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, ஐந்து நாட்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, 17 ஆயிரத்து, 239 பேர்; தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, 8,494 பேர் என, மொத்தம், 25 ஆயிரத்து, 733 பேர் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 10 ஆயிரத்து, 190 பேர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்தவர்களுக்கும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, அதிக அழைப்புகள் வருகின்றன.
எனவே, தங்கள் விண்ணப்பத்தில், சேர்க்க வேண்டிய பதிவுகள் மற்றும் சான்றிதழ் இருந்தால், selmedi@yahoo.co.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு, விண்ணப்ப பதிவு எண்ணுடன் சேர்க்க வேண்டிய சான்றிதழ்களை இணைத்து அனுப்பலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...